திருச்சியில் பஞ்சாங்கம் வெளியீட்டு விழா.
.
திருச்சியில், பஞ்சாங்க வெளியீட்டு விழா, கோட்டை மதுரைசாலை செல்வ விநாயகர் கோயிலில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது.

பாரம்பரிய வள்ளுவர்குல ஜோதிடர்கள் சங்க நிறுவனத் தலைவர் ஜெயம் த.பழனிச்சாமி தலைமை வகித்தார், தலைமை ஆலோசகர் மு.கோபால்சாமி, துணைத் தலைவர் ச.கலைவாணி முன்னிலை வகித்தனர். பஞ்சாங்கத்தை தலைவர் ஜெயம் த. பழனிசாமி வெளியிட ஐந்திர கணிதர்கள் கு.செந்தில்வேல் மற்றும் பொருளாளர் மு.மதன் அகத்தியர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்,
துணைத்தலைவர் ச. ஆனந்தன், மருத்துவ ஜோதிடம் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். சங்க நிர்வாகிகள் த. அருணகிரி, பி. தண்டாயுதபாணி, பாலமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பாரம்பரிய வள்ளுவர் குல ஜோதிடர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. பஞ்சாங்களில் வாக்கியம், திருக்கணிதம் வரிசையில், மிக துல்லியமாக கணிக்கப்பட்டுள்ள வள்ளுவர்குல ஐந்திரம் (பஞ்சாங்கம்) முக்கிய இடம் பிடித்து வருகிறது என வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் வள்ளுவர் குல ஜோதிடர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .