Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

கூலிப், ஹான்ஸ், கஞ்சாவுடன் மாணவர்களை சமூக குற்றங்களில் ஈடுபட துணை புரிந்த பொன்மலைப்பட்டி தலைமை ஆசிரியர் மீது வழக்குப்பதிவு .

0

'- Advertisement -

மாணவர்களை சமூக குற்றங்களில் ஈடுபடுவதற்கு துணை புரிந்து அவர்களை ஊக்குவித்த பொன்மலைப்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் மீது போலீசார் வழக்கு பதிவு.

 

திருச்சி பொன்மலை பட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் இருதய மேல்நிலைப்பள்ளி உள்ளது.

 

இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

இந்நிலையில் இங்கு பயிலும் ஒரு சில மாணவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான கூல்லிப், ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை பள்ளி வகுப்பறைகளிலேயே பயன்படுத்துவதாகவும் மேலும் பள்ளி அறையில் உள்ள ஜன்னல் கதவுகளை திறந்து வைத்துக் கொண்டு தாளம் போடுவதாகவும் மற்றும் தகாத வார்த்தைகள் கெட்ட வார்த்தைகளால் கூச்சலிடுவது போன்ற பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும்

 

மேலும் இதனால் பள்ளியின் அருகாமையில் உள்ள சுமார் 300 குடியிருப்பு வாசிகளுக்கு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவதாகவும் பெண்கள் மற்றும் தாய்மார்கள் பள்ளி அருகே நடந்து செல்லும் பொழுது இந்த தகாத வார்த்தைகளை கேட்பதால் முகம் சுழித்து செல்வதாகவும் கூறப்படுகிறது

இவர்களால் படிக்கும் மாணவர்களின் படிப்பும் வீணாகி வருகிறது .

 

மேலும் இதனை அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரான ஜஸ்டின் திரவியம் என்பவரிடம் குடியிருப்பு வாசிகள் பலமுறை எடுத்துரைத்தும் தலைமை ஆசிரியர் இதை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் குடியிருப்பு வாசிகள் இத்தகைய செயலை கண்டித்து தீய வழியில் செல்லும் மாணவர்களுக்கு உடந்தையாக செயல்படும் பள்ளியின் தலைமை ஆசிரியரை கண்டித்து போஸ்டர்களையும் ஒட்டி உள்ளனர் இதில் எந்த ஒரு தீர்வும் எட்டப்படாததால்

 

Suresh

நேற்று பொன்மலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் தலைமை ஆசிரியர் ஜஸ்டின் திரவியத்தின் மீது பொன்மலை கவுரவ தெரு பகுதியில் வசிக்கும் பத்மநாபனின் மகன் ஜீவானந்தம் (வயது 40) என்பவர் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என புகார் மனு அளித்தார்.

 

மேலும் பள்ளி மாணவர்களை தவறான பார்வைக்கு அழைத்துச் செல்லும் தலைமை ஆசிரியர் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ன காவல் ஆய்வாளரிடம் கேட்டுக் கொண்டார்.

 

மேலும் இதனை அடுத்து தலைமை ஆசிரியர் மீது பொன்மனைக் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

 

இத்தகவலை அறிந்த பள்ளி கல்வித்துறை தலைமை ஆசிரியரை பணியிடம் நீக்கம் செய்தவுடன் இதுகுறித்து துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டியுள்ளனர்.

 

பள்ளியில் தலைமை ஆசிரியரே மாணவர்களை தவறான பாதைக்கு அழைத்து செல்லும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது

 

பொன்மலை பட்டியில் சாமியார் ஸ்கூல் என்று அழைக்கப்படுகின்ற பாரம்பரியமிக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் ஜஸ்டின் திரவியம் அங்கு தாளாளர்களாக பணியாற்ற வருகின்றவற்களை ஜாதியின் அடிப்படையில் எந்தவித பணியும் செய்யவிடாமல் சில மாணவ அமைப்புகளுக்கு பல லட்சம் செலவு செய்து இடையூறு செய்வதையே வேலையாக கொண்டிருக்கிறார் இந்த தலைமை ஆசிரியர் சில ஆசிரியர்களை உடன் சேர்த்துக் கொண்டு தொடர்ந்து நிர்வாகத்திற்கு இடையூறு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே ஊர் சில வருடங்களுக்கு முன்பு இதேபோன்று இவர் நடந்து கொண்டதால் பள்ளிக்கல்வித்துறையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மீண்டும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இதே பள்ளியில் பணிக்கு சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது . மீண்டும் அதே போன்று ( பள்ளியின் படிக்கும் மாணவர்களின் ஒழுங்கினம் மற்றும் படிப்பை பற்றி கவலைப்படாமல் ) அட்ராசிட்டியில் இறங்கி உள்ளார் இந்த தலைமையாசிரியர் .

 

மேலும் பள்ளி மாணவிகளிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபடும் ஆசிரியர்களை டிஸ்மிஸ் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது போன்று  பள்ளி மாணவ மாணவிகள் இடையே  மதம் மற்றும் ஜாதி பிரிவினையை ஏற்படுத்தும் வகையில்  செயல்படும் ஆசிரியர்களையும் பிஸ்மிஸ் செய்ய வேண்டும் என  பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர் .

Leave A Reply

Your email address will not be published.