Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காட்டூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மது அருந்திய போலீசார் மற்றும் நண்பர்கள் .

0

'- Advertisement -

அரசு பள்ளி மைதானத்தில் காவலர்கள் மது அருந்தியதாக வீடியோ வைரலாகிவருகிறது.

திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியில் ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

Suresh

இந்தப் பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு மாணவர்கள் யாரும் பள்ளியில் இல்லாததால் அந்த ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் சிலர் அமர்ந்து பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு இருந்துள்ளனர். அவர்கள் அருகில் மது பாட்டில்கள் கிடந்துள்ளது. இதனை இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர் மோகன் வீடியோ எடுத்து உள்ளார். மேலும் அவர்களிடம் பள்ளி வளாகத்தில் ஏன் மது அருந்துகின்றீர்கள் எனவும் கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மது அருந்திய கூட்டத்தில் காவலர் ஒருவரும் இருப்பதாகவும் கூறப்பட்டது.

 

இது குறித்து திருவெறும்பூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கிருந்தவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மது அருந்தினார்களா என சோதனை செய்தனர். அதில் மணிகண்டன் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் இளையராஜா என்பவரின் நண்பர்களான தனியார் கார் ஓட்டுனர்கள் வினோத், மகேஷ்வரன் மற்றும் ரயில்வே ஊழியரான பிரபு ஆகியோர் அங்கு இருந்துள்ளனர். அவர்களை சந்திக்க இளையராஜ சென்றுள்ளார். அவர்கள் அங்கு பேசி கொண்டிருந்த பொழுது தான் இத்தகைய சம்பவம் நடந்துள்ளது எனவும் நால்வரில் மகேஷ்வரன், பிரபு ஆகிய இருவர் தான் அங்கு மது அருந்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. காவலர் மது அருந்தவில்லை என்பதையும் போலீசார் உறுதிப்படுத்தினர். அதனையடுத்து மகேஷ்வரன், பிரபு ஆகிய இருவர் மீதும் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். காவலர் இளையராஜாவிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் திருச்சி மாவட்ட காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.