குடியிருப்புகள் நடுவே செல்போன் டவர் அமைக்கும் பணி: வீடுகளில் எர்த் அடிக்கிறது. திருச்சி வெள்ளை வெற்றிலைகார தெரு பகுதி பொதுமக்கள் பேட்டி.
திருச்சி வெள்ளை வெற்றிலைகாரத் தெருவில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு .
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி, வெள்ளை வெற்றிலைகாரத் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல் பாரத் நிறுவனத்தின் செல்போன் டவர் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் புதிய செல்போன் டவர் அமைக்க கூடாது என இப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த திங்கள்கிழமை மனு அளித்தனர். மேலும் இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் இன்று செய்தியாளர்களிடம் கூறுகையில்:-
இந்த டவர் இருக்கும் பகுதியில் குடியிருந்து வருகிறேன் . டவர் வேலை தொடங்கிய இரண்டு நாளில் வீட்டில் உள்ள அனைத்து இரும்பு பொருட்களும் சாப்பிடும் தட்டு உட்பட ஷாக் அடிக்க ஆரம்பித்தது. தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டது . குழந்தைகள் உள்ள வீடுகளில் இது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது என்றார் ஒரு பெண்மணி .

தொலைதொடர்பு சேவை சம்மந்தமாக, வெள்ளை வெற்றிலைக்கார தெருவில் தனி நபருக்கு சொந்தமான வீட்டு மாடியில் ( அந்த நபருக்கு டவர் மூலம் வரும் வாடகை தான் முக்கியம் மற்றவர்களைப் பற்றி எனக்கு கவலை கிடையாது என கூறி உள்ளார் ) செல்போன் கோபுரம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். செல்போன் டவர் அமைக்கும் இடத்தில் தீயணைப்பு வாகனம் வந்து செல்லும் அளவிற்கு இட வசதி இருக்க வேண்டும். ஆனால், இந்த குறுகிய பகுதியில் செல்போன் டவர் அமைக்க உரிய அனுமதி (TRAI) பெற்றுளார்களா என தெரியவில்லை.
செல்போன் டவர் அமைக்கும் இடத்தில் 5 மீட்டர் சுற்றும் அளவில் எந்தவித குடியிருக்கும் இருக்கக் கூடாது சட்டம் இருக்கும்போது எப்படி இருக்கு அனுமதி வழங்கப்பட்டது என தெரியவில்லை .
மேலும் இதற்கான பணிகளில் ஈடுபட்ட போது, மின் கம்பியில் விபத்து ஏற்பட்டு எங்களது வீட்டின் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டு பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்துள்ளது. இது குறித்து அங்கு பணியில் இருந்தவர்களிடம் முறையிட்டும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. பொதுமக்கள் நெருக்கமாக வாழும் இந்த பகுதியில் செல்போன் கோபுரம் அமைப்பதால், கதிர்வீச்சு காரணமாக கேன்சர், கர்ப்பிணி பெண்களுக்கு பாதிப்பு போன்ற உடல்நல கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இங்கு செல்போன் டவர் அமைக்க கூடாது என 60க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டு மாவட்ட ஆட்சியர், போலீஸ் கமிஷனர், மாநகராட்சி, கமிஷனர் உள்ளிட்ட அலுவலகங்களில் மனு அளித்துள்ளோம். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் செல்போன் டவர் அமைக்க தடை விதிக்க வேண்டும் என சரவணன் உட்பட அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.