திருச்சிராப்பள்ளி, கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக் கல்லூரி , மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இன்று (27.03.2025) வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டது.
திருச்சி அரசு மருத்துவமனையில் இது போன்ற நிகழ்வு 22-வது முறையாக பெறப்பட்டுள்ளது .
திருச்சி மாவட்டம், திருத்தியமலையைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஆண், சாலை விபத்தில் தலையில் பலத்த காயமடைந்து திருச்சிராப்பள்ளி, மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த 25.03.2025 அன்று மதியம் 12.35 மணி அளவில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் அவரது உடல்நிலையில் எந்தவித முன்னேற்றம் ஏற்படாமல் அடுத்த நாள் நேற்று புதன்கிழமை (26.03.2025) மாலை 06.23 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்தார்.

இந்த மூளைச்சாவு மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டு, அவரது உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை உணர்ந்த இறந்தவரின் உறவினர்கள் முழுமனதுடன் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க முன் வந்தார்கள். மேலும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி அவருடைய உறுப்புகளான கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை தானமாக பெறப்பட்டது.
திருச்சியில் அவரது உடல்திசு பொருத்தம் உள்ள இரு நபர்கள் இரு தனியார் மருத்துவமனையில் உள்ளதால் கல்லீரல் ஒரு தனியார் மருத்துவமனைக்கும் மற்றும் சிறுநீரகங்கள் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கும் தானாமாக வழங்கப்பட்டது திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய நபருக்கு அரசு சார்பில் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது .