Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி: விமானத்தில் கடத்தி வரப்பட்டரூ.5 கோடி மதிப்புள்ள உயர் ரக கஞ்சா பறிமுதல். பயணியிடம் விசாரணை

0

'- Advertisement -

திருச்சி விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் பல்வேறு பொருட்கள் கடத்துவதை தடுக்க சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்துவது வழக்கம்.

 

அப்படி அவர்கள் நடத்தி வரும் சோதனையில் ஏராளமானோர் தங்கம் கடத்தியதாக சிக்கி உள்ளனர்.இந்நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட பொருள் ஒன்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.. அதன் மதிப்பு ரூ.5 கோடி என்று தெரிவித்தனர்.

 

தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதன் காரணமாக தங்கத்தை விமானங்கள் வழியாக வரி கட்டாமல் கடத்துவது அதிகரித்து வருகிறது. தங்கம் கடத்தும் குருவிகள் சிக்கினால் கண்டிப்பாக சிறையில் காலத்தை கழிக்க வேண்டியதிருக்கும்.. ஆனால் கடும் சோதனைகளை மீறி தங்கத்தை விமான நிலையங்களில் கடத்துகிறார்கள்.

 

Suresh

திருச்சிவிமான நிலையத்தை பொறுத்தவரை வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிக அளவில் தங்கம் கடத்தப்படுவதும், அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து அரிய வகை உயிரினங்கள் கடத்தப்பட்டு வந்திருக்கிறது. இதேபோல் சில நாட்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது.

 

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்திருந்து. வழக்கம் போல், இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த பயணி ஒருவரின் உடைமைகள் இருந்தது. அதை தீவிரமாக சோதனை செய்தனர்.

 

இதில் அந்த பயணி தனது உடைமையில் மறைத்து ரூ.5 கோடி மதிப்பிலான 5 கிலோ ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா வகை போதைப்பொருளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.