திருச்சியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மலரும் நினைவுகள் சந்திப்பு நிகழ்ச்சியில் 30 போலீசாருக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .
திருச்சி மத்திய பேருந்து நிலைய தனியார் ஹோட்டலில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்ட மலைக்கோட்டை மலரும் நினைவுகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதல் அணியில் 1981, 1982 வது ஆண்டு பணியில் சேர்ந்து ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகளின் நான்காம் ஆண்டு மலரும் நினைவுகள் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருச்சி, மதுரை, சென்னை, கோயம்புத்தூர், விழுப்புரம், கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாட்டில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீசார் அவர்களின் பழைய கால காவல்துறையில் பணியாற்றிய போது நடந்த நிகழ்வுகளை மலரும் நினைவுகளாக பகிர்ந்து கொண்டனர்.
இந்த கலந்து கொள்ள வந்திருந்த அனைத்து ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னதாக மறைந்த 30 ஓய்வு பெற்ற போலீசாருக்கு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற உதவி போலீஸ் கமிஷனர்கள் சுந்தரமூர்த்தி, வீரமணி, கண்ணதாசன், மகாதேவன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளார்களாக ராஜு, ரவிச்சந்திரன், முத்துசாமி, பொன்மலை இளங்கோவன், வேதமூர்த்தி, சந்திரன், ஸ்ரீரங்கம் இளங்கோவன், ஜோசப், ராமானுஜம், பாஸ்கர், சாமிநாதன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்து இருந்தனர் .
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.