கடந்த 24 ஆண்டுகளாக திருச்சி மாவட்டத்தில் சத்யம் டிவி , ஜெயா டிவி, நியூஸ் J உள்ளிட்ட தொலைக்காட்சிகளில் மண்டல நிருபராக பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் அ. ஸ்டீபன் அவர்கள் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பாக கேரளாவில் உள்ள அவரது பாட்டியை பார்ப்பதற்காக மனைவி மற்றும் மகளுடன் சென்றிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 15-ம் தேதி நள்ளிரவு மாரடைப்பு ஏற்பட்டு திருவனந்தபுரம் பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார் .
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 10 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் அவரது உடல் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக திருச்சி குண்டூர் எம்ஐடி கல்லூரி அருகே உள்ள அவரது தாயார் வீட்டில் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. அவரது நல்லடக்கம் நாளை 18ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் திருச்சி வேர் ஹவுஸ் பகுதியில் உள்ள கல்லறையில் நல்லடக்கம் செய்யப்படும் என கூறியுள்ளனர்.
அனைவரிடமும் இன்முகத்துடன் சிரித்துப் பேசும் நண்பன் ஸ்டீபன் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாத மிகப்பெரிய இழப்பு.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு திருச்சி எக்ஸ்பிரஸ் சார்பிலும் மற்றும் திருச்சி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் .