திருச்சி சுப்பிரமணியபுரத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக பைக் சாகசத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் பைக்குடன் கைது.
திருச்சியில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி
பைக் சாகசம் செய்த 2 வாலிபர்கள் கைது.
திருச்சியில் போலீசார் நடவடிக்கை -பைக் பறிமுதல்.

திருச்சியில்
பைக் சாகசத்தில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி, சுப்ரமணியபுரம், காந்தி தெருவைச் சேர்ந்தவர் முத்தலிப் (வயது 42). திருச்சி – சென்னை நெடுஞ்சாலையில் கறிக்கடை அருகே பேப்பர் கடை நடத்தி வருகிறார். இவர் தன் கடை அருகே நடந்து சென்றபோது 2 வாலிபர்கள் பைக்கை அதிவேகமாக ஓட்டி, அனுமதியின்றி பைக் சாகச செயலில் ஈடுபட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இது குறித்து முத்தலிப் அளித்த புகாரின் பேரில் கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து புத்துார், களல்லாங்காட்டைச் சேர்ந்த அஜய் (வயது 25) , இ.பி. ரோடு தெற்கு சுண்ணாம்புக்கார தெருவைச் சேர்ந்த தரனீஸ் (வயது 20) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். அவர்களது பைக் பறிமுதல் செய்யப்பட்டது.