ரூ. 71 லட்சம் ரூபாய் வரி கட்டாமல் ஏமாற்றி வந்த ஐஸ்வர்யா கருத்தரித்தல் மருத்துவமனையை பழனி நகராட்சி ஜப்தி செய்ய, மருத்துவமனையின் பொருட்களை வண்டியில் ஏற்றினர்.
இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நவீன காலத்தில் அதிகரித்துள்ள வேலை பளு மற்றும் உணவு பழக்க வழக்கம் காரணமாக, இளம் தம்பதியினரிடையே குழந்தை பெறுவது சிக்கலாகி வருகிறது. இதனால், நாடு முழுவதும் புற்றீசல் போல கருத்தரிப்பு மையங்கள் வளர்ந்து வருகின்றன. இதன்மூலம் சோதனை குழாய் மற்றும் பல்வேறு நவீன முறையில் குழந்தை பெற்றுக்கொள்வது அதிகரித்து வருகிறது. அதேவேளையில், இந்த குழந்தை பேறு குறித்தும், சர்ச்சைகளும் எழுந்து வருகின்றன. மேலும் குறைந்த பட்சம் ரூ.2 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை பணத்தை கொள்ளையடித்தும் வருகின்றன. இருந்தாலும், இதுபோன்ற கருத்தரிப்பு மையங்களுக்கு இளம் தம்பதிகள் இடையே நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருகிறது.
இதுபோன்ற கருத்தரிப்பு மையங்களில் பிரபலமானது ஐஸ்வர்யாக கருத்தரிப்பு மையம். இந்த ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்துக்கு சென்னை உள்பட பல பகுதிகளில் கிளைகள் உள்ளன. குறிப்பாக, திருச்சி,சென்னை, கோயம்புத்தூர், ராமநாதபுரம், சிவகாசி, தேனி, திருப்பூர், மைசூர், பழனி என பல இடங்களில் கிளைகள் உள்ளன. இந்த மருத்துவமனை குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுந்துள்ளன. ஏற்கனவே சட்டவிரோதமாக சிறுபெண்களின் கருமுட்டை எடுத்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்டதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இநத் நிலையில், பழனியில் உள்ள ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையம் முறையாக வரி கட்டாத நிலையில், பழனி நகராட்சி சார்பில் பல முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டும், அதை கண்டுகொள்ளாத நிலையில், நகராட்சி அதிகாரிகள் இறுதியாக ஜப்தி நோட்டீஸ் வழங்கினர். இதைத்தொடர்ந்தும் மருத்துவமனை நிர்வாகம் தெனாவெட்டாக நடந்து கொண்டதால், பழனி நகராட்சி வாகனம் மற்றும் தூய்மை பணியாளர்களுடன் வந்து, மருத்துவமனையில் இருந்தவர்களை வெளியேற்றி விட்டு அங்கிருந்த பொருட்களை அள்ளிச் செல்ல முயன்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியை தலைமையிடமாக கொண்ட பிரபல ஐஸ்வர்யா கருத்தரித்தல் மையத்துக்கு சொந்தமாக பழனியில் நர்சிங் கல்லூரி உள்பட 12 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களுக்கு பழனி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய குடிநீர் வரி, சொத்துவரி ஆகியவை நீண்ட நாட்களாக செலுத்தப்படாமல் இருந்துள்ளது. இதன்காரணமாக கடந்த 2017ம் ஆண்டுமுதல் 2024-2025ம் நிதியாண்டு வரையில் ரூ. 71லட்சம் ரூபாய் வரிபாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வரி பாக்கியை செலுத்த வலியுறுத்தி பழனி நகராட்சி சார்பில் பலமுறை நோட்டீஸ் வழங்கியும் மருத்துவமனை நிர்வாகம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது. கடந்த ஏழு ஆண்டுகளாக ரூ.71 லட்சம் ரூபாய் வரை வரி பாக்கி வைத்திருப்பது இந்நிலையில் 2024-25ம் ஆண்டு நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில் நகராட்சிக்கு சொலுத்த வேண்டிய ரூ.71லட்சம் ரூபாய் வரிபாக்கியை செலுத்தாத மருத்துவமனை நிய்வாகத்திற்கு நகராட்சி அதிகாரிகள் ஐப்தி நோட்டிஸ் வழங்கப்பட்டது.
நகராட்சி பொறியாளர் ராஜவேல் தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று ஐப்தி நோட்டீசை வழங்கினர். ஆனால் அதற்கும் முறையான பதில் கூறாததால், மருத்துவமனையை ஜப்தி செய்ய நகராட்சி வாகனம், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோருடன் மருத்துவமனை முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்நது மருத்துவமனை நிர்வாகம் 71லட்சம் ரூபாய் வரி பாக்கியில் பாதியை இன்றும், மீதித்தொகையை அடுத்த வாரமும் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தனர். ஆனால் நிதியாண்டு முடிவடைய இன்னும் சில நாட்களே இருப்பதால் முழுத் தொகையையும் செலுத்துமாறு நகராட்சி அதிகாரிகள் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து வாகனத்தில் ஏற்றப்பட்ட பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டது. மீதி தொகையை ஒரு வாரத்திற்குள் கட்டாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.