Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

காவல் நிலையத்திற்கு, ரவுண்ட்ஸ் வரும் போலீசாருக்கு பணம் தந்து தான் பிளாக்கில் சரக்கு ஓட்டுகிறோம் . என் முகவரி இதுதான் உன்னால் என்ன செய்ய முடியும்? திருச்சி மணல் வாரி ரோட்டில் பிளாக்கில் சரக்கு விற்கும் நபரின் மிரட்டல்.

0

'- Advertisement -

எனது பெயர் பரத் நான் அப்படிதான் சரக்கு விற்பேன்…! முடிந்தால் பார்த்துக் கொள் பார் ஊழியர் சவால்… காவல் ஆணையர் காமினி நடவடிக்கை எடுப்பாரா…?

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி திருச்சியில் மாநகரில் பல விதத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுத்து திருச்சி மாநகரில் குற்றமில்லா மாநாகராமாக மாற்ற பெரும் முயற்சி எடுத்து வருகிறார்.

 

Suresh

ஆனால் தலைமை முடிவு செய்து என்ன பயன் தலைமை சரியாக இருந்தும் தலைமையின் கீழ் பணிபுரியும் அதிகாரிகள் சரியாக

இருந்தால் தானே… அதற்கு உதராணம் பாலக்கரை காவல் நிலையத்திற்கு உட்பட மணல்வாரித்துறை டாஸ்மாக் பாரில் அரசு அனுமதித்த நேரத்தை கடந்து அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்வதை வீடியோ எடுத்த நபரிடம் காவல் நிலையம், மது ஒழிப்பு போலீஸ்சாருக்கு இல்லாமல் தினமும் பேட்ரோல் வண்டிக்கு ரூ.200, தந்து தான் பிளாக்கில் சரக்கு ஓட்டுகிறோம் , அப்படி தான் விற்போம் எனது பெயர் பரத் நான் பாரதி நகர் 5-வது தெருவில் வசிக்கிறேன் உன்னால் முடிந்ததை பார் என மிரட்டும் விற்பனையாளர்.

 

இந்த விசயம் நடக்கும் பொழுதே காவல் துறை Patroll வாகனத்திற்கு தகவல் தெரிவித்து உடனே patrol வாகனத்தை எடுத்து வருகிறார்கள் சட்ட விரோத மதுபானம் விற்பவர்களை அல்ல … தட்டி கேட்டவர்களை பிடிப்பதற்கு …! காவல் துறை ஆணையர் காமினி சட்டவிரோத நடவடிக்கைக்கு என்னதான் கடிவாளம் போட்டாலும் அவர் தலைமையின் கீழ் பணியாற்றும் காவல் அதிகாரிகள் இப்படி இருந்தால் இது போல் தான் நடக்கும்…! காவல் ஆணையர் காமினி தகுந்த நடவடிக்கை எடுப்பாரா…!

Leave A Reply

Your email address will not be published.