திருச்சி தேசிய கல்லூரி அருகே போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது .
திருச்சி திண்டுக்கல் சாலையில் உள்ள தேசிய கல்லூரி அருகில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது .

இதையடுத்து செசன்ஸ் கோர்ட் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்பொழுது ஒரு வாலிபர் திண்டுக்கல் சாலையில் நின்று கொண்டிருந்தார். அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்
மேலும் அவரிடம் போலீசார் சோதனை நடத்திய போது நூற்றுக்கு மேற்பட்ட போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. போலீசார் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை செய்த போது கல்லுக்குழி பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தர பாண்டி (வயது 26)என்பது தெரியவந்தது..
இதையடுத்து போலீசார் சண்முக சுந்தர பாண்டியனை கைது செய்து அவரிடம் இருந்து 100 போதை மாத்திரைகளை செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.