நாளை திருச்சி புத்தூர் அருள்மிகு குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழா. அரசு சார்பாக முதல் ஆட்டுக்குட்டி வெட்டப்படும்.
திருச்சி புத்தூர் அருள்மிகு குழுமாயி அம்மன் குட்டிக்குடி திருவிழா.
அரசு சார்பாக முதல் ஆட்டுக்குட்டி வெட்டப்படும்
திருச்சி புத்தூர் அருள்மிகு குழுமாயி அம்மன் திருவிழா இந்த ஆண்டுக்கான விழா மாசி மாதம் 7 தேதி புதன் கிழமை இரவு அதாவது 19.2.2025 அன்று காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
மாசி மாதம் 19 தேதி 03.03.2025 அன்று திங்கட்கிழமை மறு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று 04.03.2025 செவ்வாய் கிழமை அன்று மாலை உறையூர் மேட்டுத் தெருவில் இருந்து யானை மீது பூக்கள், மாலை வாசனைத் திரவியங்கள் குழுமாயி அம்மன் கோவிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. குழுமாயி அம்மன் கோவிலில் இருந்து அம்மனுக்கு பூஜை செய்து மாலையுடன் கல்லாங்காடு வழியாக வண்ணாரப்பேட்டை வந்தடைந்தது. பின்பு தேரில் வைத்து அலகரித்த குழுமாயி அம்மன் புத்தூர் நால்ரோடு வந்ததும் எல்லைக் கல்லில் இருந்து மருளாளி சிவக்குமார், கொடிமணி ஆகியோர் குமரன் நகர் சீனிவாசன் நகர் வழியாக எல்லைகள் வந்தடைந்தது. குழுமாயி அம்மனும் வேறு வேறு திசைகளில் இருந்து வந்து புத்தூர் சிந்தாமணியில் ஒன்றுடன் ஒன்று சந்தித்து பின்பு உறையூர் மேல கல் நாயக்கர் தெருவில் இருந்து நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீ பந்தங்களுடன் அலங்கரித்து தேரில் வரும் அம்மனை வரவேற்றர்கள். மருளாளியை இரு இளைஞர்கள் தனது தோள்களில் சுமந்து வந்தனர். தொடர்ந்து இன்று இரவு அம்மன் அலங்கரித்த தேருடன் வரும்.பொழுது காளியா விட்டம் நடைபெறும். பிறகு அம்மன் புத்தூர் மந்தை வந்தடையும்
இரவு காளியாவிட்டம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து 05.03.2025 இன்று காலை சுத்த பூஜையும் வீடுதோறும் குழுமாயி அம்மனுக்கு மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இறுதியாக மேல கல்நாயக்கன் தெருவில் இருந்து இந்த தெருவில் உள்ள நூற்றுக்கணக்கான ஆண்கள்,பெண்கள் திரளான பக்தர்கள் மாவிளக்குகளுடன் ஊர்வலம் மேளதாளங்கள் முழங்க வானவேடிக்கைகளுடன் பள்ளப்பூஜை குழுமாயி அம்மன் இருக்கும்.
இரவு எத்தனை மணி ஆனாலும் இவர்கள் பூஜை முடித்த பின்பு தான் அம்மன் எடுத்து செல்வார்கள்.
திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக நாளை 06.03.2025 காலை குட்டி குடித்தல் நிகழ்வு.இதில் முதல் ஆட்டுக்குட்டி அரசு சார்பாக வெட்டப்படும், பின்பு ஆயிரக்கணக்கான ஆட்டுக்குட்டிகள் காணிக்கையாகச் செலுத்தப்படும். இரத்தத்தை மருளாளி சிவகுமார் உறிஞ்சி குடிப்பார்.
இதுவே திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாகும் .
மறுநாள் 07.03.2025 வெள்ளிக்கிழமை அன்று மஞ்சள் நீராட்டு விழாவும் சனிக்கிழமை குடிபுகுதல் விழாவும் நடைபெறும். திருவிழா இத்துடன் நிறைவு பெற உள்ளது.