சாம்பியன்ஸ் டிராபி: இன்றைய அரை இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக தீர்ப்பளிக்கும் நடுவர் நியமனம்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி இன்று செவ்வாய்க்கிழமை பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை துபாயில் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிக்கான நடுவர்களை தற்போது ஐசிசி அறிவித்திருக்கிறார்கள். அதில் களத்தில் ரிச்சர்ட் லில்லிங் ஒர்த் மற்றும் கிறிஸ் கேபனி ஆகியோர் கள நடுவார்களாக செயல்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று போட்டி நடுவராக மைக்கேல் காப் செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இங்கிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் இல்லிங் ஒர்த் இந்தியாவுக்கு கடந்த சில காலங்களாக தொடர்ந்து தவறான முடிவையே வழங்கி வந்திருக்கிறார்.
நடுவரின் முடிவை சரி பார்ப்பதற்காக தான் டிஆர்எஸ் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த டிஆர்எஸ்ஸை தவறாக பார்த்து முடிவு தந்த நபர் தான் இந்த ரிச்சர்ட். அண்மையில் பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணி தோல்வியை தழுவியதை யாராலும் மறந்துவிட முடியாது.

அந்தப் போட்டியில் நடுவர் கொடுத்த சில தவறான முடிவுகள் இந்தியாவுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியா தொடரின் போது கே.எல் ராகுல் ஆட்டம் இழந்ததை போதிய வீடியோ ஆதாரங்கள் இல்லாமல் ரிச்சர்ட் அவுட் வழங்கி விட்டார். பந்து பேட்டில் படாதது அதன் பிறகு வீடியோ ஆதாரத்தில் உறுதியானது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதேபோன்று நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கள நடுவராக பண்ட்க்கு இவர் நாட் அவுட் கொடுத்த நிலையில் மூன்றாம் நடுவர் அதற்கு அவுட் கொடுத்திருந்தார். இவர் களத்தில் இருக்கும் போது தான் இந்த சர்ச்சையும் எழுந்தது.
இதேபோன்று ஆஸ்திரேலியா தொடரில் கள நடுவரான ரிச்சர்ட், மார்ஷ்க்கு நாட் அவுட் வழங்கினார். ஆனால் டிர் எஸ் ரிப்ளேவில் பந்து ஸ்டெம்பில் பட்டும் கள நடுவர் எந்த முடிவை அறிவித்தாரோ அதே தொடரும் என மூன்றாம் நடுவரும் அறிவித்தார். இது இந்தியாவுக்கு பாதகமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு விராட் கோலி ரிச்சர்ட் லில்லிங்ஓர்த்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இந்த சூழலில் இவர் மீண்டும் களம் காண்பது இந்திய ரசிகர்களை கவலை அடைய செய்துள்ளது. 2023ஆம் ஆண்டு உலககோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், இதே ரிச்சர்ட் லில்லிங்ஒர்த் தான் கள நடுவராக இருந்தார். இதே போல், 2024 டி20 உலககோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதிய அரையிறுதியிலும், இவர் தான் கள நடுவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.