திருச்சியில் பணிசுமையால் உயிரிழந்த நீதிமன்ற ஊழியர் தற்கொலைக்கு உரிய விசாரணை நடத்த கோரி நீதிமன்ற ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
எடமலைப்பட்டி புதூர் ஜோசப் காலனியைச் சேர்ந்தவர் அருண் மாரி முத்து (வயது 36). இவர், திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், இவர் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஃபேன் கொக்கியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலைய போலீஸார் அங்கு சென்று, அவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், அருண் மாரிமுத்து பணிச் சுமையால் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி, அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தில்லை நகர் உதவி ஆணையர் தங்கப்பாண்டியன் தலைமையிலான போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அருண் மாரிமுத்து குடும்பத்தினரிடம் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.கிறிஸ்டோபர் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா ஆகியோர் விசாரணை நடத்தினார். அருண் மாரி முத்துவுக்கு சுகன்யா என்ற மனைவி, 3 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் இன்று நீதிமன்ற ஊழியர் சங்கம் சார்பில் அருண் மாரிமுத்து சாவிற்கு உரிய விசாரணை நடத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முறையான