திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில்
போதை விழிப்புணர்வு வார விழா .
மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவர் பேரவை அய்க்கஃப் இயக்கம் மற்றும் அருப்பே சுகாலயம் சார்பில் போதை விழிப்புணர்வு வார விழா நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டை போதைநோய் இல்லா மாநிலமாக உருவாக்கும் நோக்கில் விழிப்புணர்வுப் பேரணி, கருத்தரங்கு, பட்டிமன்றம், மற்றும் மாவட்ட அளவில் கலைப் போட்டிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தை ஒட்டிய சாலையில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில் பல்வேறு மாணவ மாணவியர் பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற நிறைவு விழாவில் கல்லூரி அதிபர் அருள் முனைவர் பவுல்ராஜ் மைக்கிள் சே ச செயலர் அருள் முனைவர் அமல் முதல்வர் அருள் முனைவர் மரியதாஸ் இணை முதல்வர் அருள்தந்தை பிரன்சிஸ் ஜெயபதி மற்றும் மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை உளவியல் துறைத்தலைவர் மருத்துவர். நிரஞ்சனா தேவி ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர்.
முன்னதாக நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 17 கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் 334 மாணவர்கள் கலந்து கொண்டு போதை நோய் குறித்த விழிப்புணர்வு பெற்றனர்.