Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி திருவெறும்பூரில் 11ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி நெருங்கி பழகிய திருமணமான பள்ளி வேன் டிரைவர் தலைமறைவு .

0

'- Advertisement -

திருச்சி, திருவெறும்பூர் பகவதிபுரத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரசாக் மகன் முகமது அலி (வயது 37). இவர், ஒரு பள்ளியின் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார்.

Suresh

அந்த வகையில் மாணவிகளை வேனில் அழைத்துச் செல்லும் போது 11-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நெருங்கிப் பழகியுள்ளார். மேலும், திருமணமான இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டு உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி அந்த மாணவி உடன் நெருங்கிப் பழகியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வரவே பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். மேலும், ஜமாத் பெரியவர்களை வைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முகமது அலியை கண்டித்ததோடு மாணவியிடம் பழகுவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

ஆனால், முகமது அலி தொடர்ந்து அந்த மாணவியிடம் பழகி வந்ததால் மாணவியின் பெற்றோர் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அனைத்து மகளிர் போலீசார், முகமது அலி மீது வழக்குப் பதிந்து தலைமறைவான அவரை. வலைவீசித் தேடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.