திருச்சியில் சிறு பெட்டிக்கடை, டீக்கடைகளில் உள்ள பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்யும் மாநகராட்சி அதிகாரிகள் டாஸ்மார்க் பார்களில் பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுப்பார்களா ?
திருச்சி கடை வீதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை மாநகராட்சிப் பணியாளா்கள் நேற்று வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் ( பிளாஸ்டிக்) விற்பனையை தடுக்கும் வகையில், மாநகராட்சிப் பணியாளா்கள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், மாநகா் நகா்நல அலுவலா் விஜய்சந்திரன் உத்தரவின் பேரில், பெரிய கடைவீதி, பெரிய கம்மாளத் தெரு பகுதியில் உள்ள மொத்த விற்பனைக் கடைகளில் நேற்று வியாழக்கிழமை அதிகாரிகள் திடீா் சோதனை மேற்கொண்டனர் .37 கடைகளில் நடந்த சோதனையில், 12 கிலோ நெகிழி தட்டுகள், 10 கிலோ நெகிழி பைகள், நெகிழி கப் ரோல்கள் 10 உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், 13 கடைகளுக்கு ரூ. 31 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டடு உள்ளது.
மாநகரில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் சுகாதார ஆய்வாளா்கள் அந்தந்த எல்லைக்குள்பட்டு சோதனை நடத்துவா் எனவும், தடை செய்யப்பட்ட பொருள்களை தொடா்ந்து விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைப்பதுடன், உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.
சிறு சிறு பெட்டி கடைகளில் சோதனை என்ற பெயரில் நெகிழி பொருட்களை பறிமுதல் செய்யும் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மொத்த விற்பனை கடைகளில் வெறும் பத்து கிலோ பிளாஸ்டிக் தட்டு, கப் மற்றும் 10 ரோல் பறிமுதல் செய்து இருப்பதாக கூறப்படுவது நம்பர் வருவதாக இல்லை என சிறு வியாபாரிகள் கூறுகின்றனர் .
இதேபோன்று டாஸ்மாக் பார்களில் சென்று மாநகராட்சி அதிகாரிகள் பிளாஸ்டிக் கப்புகள், தட்டுகள், பேப்பர்களை பறிமுதல் செய்வார்களா ? என கேள்வி கிளப்புகின்றனர்.