முதியோரிடம் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் மேலதெருவைச் சேர்ந்தவர் பாலாஜி ( வயது 60) இவர் ஸ்ரீரங்கம் அம்பேத்கார் நகர் பகுதியில் நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் தீமை விளைவிக்க கூடிய போதை மாத்திரைகள் விற்ற வாலிபரிடம் ஏன் இப்படி செய்கிறாய் என தட்டி கேட்டுள்ளார். அப்போது அந்த வாலிபர் முதியவரை கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 500 பணத்தை பறித்து சென்றார். இது குறித்த பாலாஜி அளித்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து திருவானைக்காவல் பாரதியார் தெருவை சேர்ந்த ரங்கநாதன் (வயது 24) என்ற வாலிபரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து அவரிடமிருந்த 60 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.