தமிழக அரசு நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டி திருச்சியில் அரசு கௌரவ விரிவுரையாளர்கள் இன்று ஆர்ப்பாட்டம்.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பாக மாபெரும் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
திருச்சி காஜாமலை பகுதியில் அமைந்துள்ள கல்லூரி கல்வி இயக்கம், மண்டல இணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் வாயிலில் தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் நல சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மண்டல செயலாளர் வேலு தலைமை தாங்கினார். துணைச் செயலாளர் பிரகாஷ், மண்டல பொருளாளர் கோபிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் . இந்த ஆர்ப்பாட்டத்தில் திருச்சி, பெரம்பலூர், லால்குடி , திருவெறும்பூர், பெட்டவாய்த்தலை முசிறி உள்ளிட்ட பகுதியில் இருந்து முக்கிய உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் இரண்டாம் சுழற்சியில் 7374 கௌரவ விரிவுரையாளர்கள் பணியாற்றி வருகிறோம். குறைந்த ஊதியம் பணி, பாதுகாப்பின்மை உள்ளிட்ட சூழலில் கல்லூரி மாணவர்கள் நலன் சார்ந்து இயங்கி வரும் கௌரவ விரிவுரையாளர்கள் உயர்கல்வி துறையின் வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றனர். எங்களது நீண்ட கால கோரிக்கையான பணி நிரந்தரம், UGC-யின் அடிப்படை ஊதிய உயர்வு , பணி பாதுகாப்பு வழங்க கோரி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
உயர் நீதிமன்றம் எங்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வு வழங்க சொல்லி தீர்ப்பு அளித்துள்ளது . எங்கள் நீண்ட கால கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு பல முறை கொண்டு சென்று வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கையின் போது அறிவிப்பு வெளியிட உதவிடுமாறு கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.
ஆகையால் மேலும் தமிழக அரசு காலதாமதம் படுத்தாமல் எங்களுடைய கோரிக்கையை குறித்து போர்க்கால அடிப்படையில் உரிய முடிவை எடுக்க வேண்டும். மேலும் மாநில அரசு காலதாமதம் படுத்தினால் வருகின்ற 22ஆம் தேதி சென்னையில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முடிவில் கல்லூரி கல்வி இயக்க மண்டல இணை இயக்குனரிடம் தங்கள் கோரிக்கை மனுவை அளித்து சென்றனர் .