Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மனைவியின் மருத்துவ செலவுக்கு வியாபாரி பாக்கெட்டில் வைத்திருந்த ஒரு லட்ச ரூபாயை பறித்த நபர் கைது.

0

'- Advertisement -

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில்

வியாபாரியிடம் மனைவியின் மருத்துவ சிகிச்சைக்காக வைத்திருந்த ஒரு லட்ச ரூபாய் பணத்தை பறித்துச் சென்றவர் கைது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு வெங்கரை பகுதி சேர்ந்தவர் ரெங்கராஜ் (வயது 42 ) வியாபாரி. இவரது நண்பர் முத்துகிருஷ்ணனுடன் புதுக்கோட்டை செல்வதற்காக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பஸ் நிறுத்தத்தில் நின்று

கொண்டிருந்தனர். அப்போது ரெங்கராஜ் தனது மனைவி சிகிச்சைக்காக ஒரு லட்சம் பணத்தை தனது பாக்கெட்டில் வைத்து எடுத்து வந்துள்ளார்.

 

இதனை கண்ட 2 மர்ம நபர்கள் ரெங்கராஜ் பாக்கெட்டில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தைப் பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர் .

இதில் கன்டோன்மெண்ட் காவல் போலீசார் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் காட்டூர் பகுதியை சேர்ந்த ரமேஷ் (வயது 42) என்பவரை கண்டோன்மென்ட் போலீசார் கைது செய்து தப்பி ஓடிய மற்றொருவர் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.