திருச்சி: டாக்டர் அம்பேத்கார் மின் பணியாளர் மற்றும் பொறியாளர் சங்க 16வது மாநில செயற்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் .
அம்பேத்கர் பணியாளர் மற்றும்
பொறியாளர் சங்கம்,தமிழ்நாடு மின்சார வாரியம் 16வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது .
டாக்டர். அம்பேத்கர் பணியாளர் மற்றும்
பொறியாளர் சங்கம்,தமிழ்நாடு மின்சார வாரியம் 16வது மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.
மாநிலத் தலைவர் இராமச்சந்திரன் தலைமையில், கூடுதல் தலைமைப் பொறியாளர் சம்பத் மகாராஜன் செயற்பொறியாளர் ராஜேந்திரன்
முதன்மை துணைத்தலைவர் நேருஜி முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும்
மாநில பொருளாளர் முத்துக்குமார் வரவேற்று சிறப்புரை ஆற்றினார்.

பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கருத்துரை வழங்கினார்.
மேலும் இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் குறித்து விவாதித்தனர்
.வாரிய உத்தரவு எண் : 2 ஐ ரத்து செய்திடவும், வாரிய மறுசீரமைப்புக்கான உத்தரவு எண் : 6 மற்றும் 7 ஐ ரத்து செய்யவும், அவுட்சோர்சிங் முறையை ரத்து ,50000 க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை உடனே நிரப்பிட விடவும்,
இடஒதுக்கீடு, பணி நிரந்தரம், பதவி உயர்வு, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம்,
ஊதிய உயர்வு, வரையறுக்கப்பட்ட வேலை போன்ற தொழிலாளர் உரிமைகளை பாதுகாத்திட, நிர்வாகத்தில் சாதிய பாகுபாட்டை தடுத்து நிறுத்திட
ஒப்பந்தத்தில் உறுதி செய்யப்பட்ட பதவிகளை நிர்வாகம் தன்னிச்சசையாக
ரத்து செய்வதை தடுத்து நிறுத்திட,
மின் விபத்தைத் தடுத்திட களப் பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கிட,ஒப்பந்த உழியர்களை பணி நிரந்தரம் செய்திட.பகுதி நேரப் பணியாளர்களை முழுநேரப் பணியாளர்களாக பணி நிரந்தரம் செய்திட என பல்வேறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் நிகழ்ச்சியில் திருச்சி மண்டலத் தலைவர் முத்துச்சாமி நன்றியுரையாற்றினார்.திருச்சி வட்டச் செயலாளர் பிரகாஷ். திருச்சி வட்ட பொருளாளர் விவேகானந்தன்,திருச்சி கிழக்கு கோட்ட செயலாளர் பாலகுமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த மாநில நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.