திருச்சி காந்தி மார்க்கெட்டில் நள்ளிரவு மோதல்.
தேங்காய் கடையை அடித்து நொறுக்கி ஆட்டோ கண்ணாடி உடைப்பு
4 வாலிபர்கள் மீது வழக்கு பதிவு.
திருச்சியின் மையப் பகுதியில் அமைந்துள்ள காந்தி மார்க்கெட் தினமும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த நிலையில் நேற்று திருச்சி, பாலக்கரை, எடத்தெருவைச் சேர்ந்தவர் செந்தில் முருகன் (வயது 44). இவர் திருச்சி, காந்திமார்க்கெட், 6வது நுழைவு வாயில் அருகே தேங்காய் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடைமுன் லோடு வண்டியில் இருந்த தேங்காய்களை அவரது கடையில் வேலை செய்யும் கனகராஜ் மற்றும் குணசேகரன் ஆகிய 2 பேர் இறக்கி வைத்துக்கொண்டிருந்தனர், அப்போது அங்கு காந்தி மார்க்கெட் எதிரே உள்ள பகுதியை இளைஞர்கள் 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து மதுபோதையில் கனகராஜ் மற்றும் குணசேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்,
இந்த வாக்குவாதம் பின்ன கைகலப்பாக மாற இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
மேலும் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அருகிலுள்ள தங்களது நண்பர்கள் சுமார் 30 பேரை அழைத்து லோகு கேட்டுக் கொண்டிருந்த லோடுமேன் களையும் தாக்க தொடங்கினர் . இதனால் அங்கு பரபரப்பு பதட்டமும் ஏற்பட்டது . காந்தி மார்க்கெட் இருக்கு காய்கறி வாங்க வந்த பயந்து ஒதுங்கி நின்றனர். மேலும் 10:30 மணி தாங்காத அந்த இளைஞர்கள் காந்தி மார்க்கெட் வளாகத்திற்குள் நுழைந்து அப்பகுதியில் காய்கறிகள் விற்பனை செய்து கொண்டிருந்த வியாபாரிகள் மீதும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர் . வியாபாரிகளின் காய்கறிகள் பெரும் சேதம் அடைந்தது . இந்த தகவல் அறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இந்ததகராறில் 4 வாலிபர்களும் லோடு ஆட்டோவின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர். அதோடு அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தினர். மேலும் தகராறை விலக்கிவிடச்சென்ற செந்தில் முருகனையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இது குறித்து செந்தில் முருகன் காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கிவியன், ராஜர், சகாய ரிச்சர்ட், ராஜன் ஆகியோர் மீது வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த 4 வாலிபர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தில் 4 வாலிபர்களையும் தாக்கி காயப்படுத்தியதாக வாலிபர்களின் உறவினர் அயில்ராஜ் என்பவர் அளித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் திருச்சி, திருவரங்கம், குழுமணி, அண்ணாநகரைச் சேர்ந்த குணசேகரன் (வயது23) என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்று இரவு நடந்த இந்த இரு தரப்பு மோதலால் காந்தி மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து காந்தி மார்க்கெட் வியாபாரிகள் கூறும்போது:- காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற இந்த மோதல் சம்பவத்தினால் பல வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் , அவர்களின் பொருள்களும் நாசமாகி உள்ளது . தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெற காரணமாக உள்ள காந்தி மார்க்கெட் சுற்றுப்பகுதிகளில் அமைந்துள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மாவட்டம் நிர்வாகம் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .