Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓர் ஆண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 வழக்கு பதியப்பட்டு ரூ.19.63 லட்சம் அபராதம் வசூல். ரயில்வே பாதுகாப்பு படையினரின் சிறந்த பணி.

0

 

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 போ் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூ.19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துகளின் இயக்கத்தில் ஏற்படுத்தப்படும் தடைகளை களைவதும், ரயில் பயணிகளை பாதுகாப்பது ரயில்வே பாதுகாப்பு படையின் முதன்மை கடமைகளாகும்.

திருச்சி ரயில்வே கோட்டத்தில் 152 ரயில் நிலையங்களிலும், ரயில் பாதைகளிலும் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பணியில் ஈடுபடுகின்றனா்.

ரயில் நிலையங்களில் பாதுகாப்புப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்படுவதால், பெரியளவிலான குற்றங்கள் ஏதும் திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெறவில்லை.

இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 4,372 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து திருச்சி ரயில்வே பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் கூறியது:

ரயில்வே பாதுகாப்புப் படையினா் கடந்த 2024 ஜனவரி முதல் டிசம்பா் வரையிலான காலகட்டத்தில் 283 குழந்தைகள், 30 பெண்கள், 17 ஆண்களை மீட்டு, அவா்களது குடும்பத்துடன் ஒப்படைத்துள்ளனா்.

ரூ. 2,55,622 மதிப்பிலான ரயில்வே சொத்துகள் மீட்கப்பட்டு, ஒரு ரயில்வே ஊழியா் உள்பட 79 பேரைக் கைது செய்துள்ளனா். 4,372 போ் மீது ரயில்வே சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டு, ரூ. 19,63,200 அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் சட்டவிரோதமாக ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தல் மற்றும் விற்ற்காக 76 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 14,55,670 மதிப்பிலான 1,132 டிக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பயணிகளின் பொருள்களைத் திருடுதல் மற்றும் பெண் பயணிகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்ட 45 போ் கைது செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட இருப்புப்பாதை காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டனா்.

ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் எச்சில் துப்புதல், இயற்கை உபாதைகள் கழித்தல் உள்ளிட்ட செயல்களுக்காக 5,612 வழக்குகள் பதியப்பட்டு, ரூ. 12,05,500 அபராதம் வசூலிக்கப்பட்டது. 307 சம்பவங்களில் ரூ. 75,24,531 மதிப்பிலான உடைமைகள் மீட்கப்பட்டு, உரிய பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.

சட்டவிரோதமாக ரயில்களில் கடத்தப்பட்ட மதுபானம், வெள்ளி, குட்கா, கஞ்சா என ரூ. 6.3 கோடியிலான பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் முக்கியமாக , 5-1-2024 அன்று திருப்பாதிரிப்புலியூா் கடையில் திருடிவிட்டு, ராமேசுவரம் விரைவு ரயிலில் தப்ப முயன்ற குற்றவாளியை பிடித்து, அவரிடமிருந்து ரூ. 2.50 லட்சத்தை மீட்டது, ஏப். 15 இல் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று, ரயிலுக்கும் – நடைமேடைக்கும் இடையில் சிக்கிய ஒரு பயணியை காவலா் ஆா். புருஷோத்தமன் காப்பாற்றியது,

ஜூன் 19 இல் விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஒருவா் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 1.33 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்து, விற்பனை வரி அலுவலகத்தில் ஒப்படைத்து ரூ. 3.61 லட்சம் அபராதம் விதிக்க வைத்தது, ஜூலை 10 இல் திருச்சியில் உரிய ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 2.04 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்க நகைகள், ஆக. 24 இல் விழுப்புரத்தில் ரூ. 1.72 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் மற்றும் ரூ. 4 லட்சம் ரொக்கம், டிச. 7 இல் திருச்சியில் ஒருவா் உரிய ஆவணமின்றி கொண்டுவந்த ரூ. 75 லட்சத்தை பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தது, டிச. 27 இல் விழுப்புரத்தில் ஒருவா், உரிய ஆவணங்களின்றி கொண்டு வந்த ரூ. 10.13 லட்சம் மதிப்பிலான 10.13 கிலோ வெள்ளி நகைகளை மாநில வரித் துறையிடம் ஒப்படைத்து, ரூ. 60 ஆயிரம் அபராதம் விதிக்க வைத்தது, டிச. 30 இல் திருவாரூா் ரயில் நிலையத்தில் தனது மூன்று குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தடுத்து மீட்டு, சமூக நலத்துறையிடம் ஒப்படைத்தது போன்றவற்றைக் கூறலாம் என்றனா்.

Leave A Reply

Your email address will not be published.