Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் டி20 தொடர் ஆட்ட நாயகன் விருது பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு மறுப்பு .

0

'- Advertisement -

 

இந்தியா இங்கிலாந்து இடையேயான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றதுடன் அடுத்ததாக ஒருநாள் தொடர் நடக்கவிருக்கிறது.

பிப்ரவரி 6,9,12 ஆகிய மூன்று தேதிகளில் மூன்று போட்டிகள் கொண்ட தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பயிற்சியாக ஒத்திகையாக இத்தொடர் அமையும். டி20ஐ தொடரில் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரர்கள் சிலர் ஒருநாள் தொடருக்கு தக்கவைக்பட்டு மிச்சம் சிலர் கைவிடபட்டுள்ளனர்.

Suresh

கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் அணிக்குள் வந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார். மேலும், விராட் கோலி, கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா உள்ளிட்டோரும் மீண்டும் அணிக்குள் நுழைந்துள்ளார்கள். ஃபார்ம் அவுட்டில் இருக்கும் ரோஹித் மற்றும் கோலிக்கு, இந்தத் தொடர் சரியான பயிற்சியாக அமைந்து மீண்டும் நல்ல ஃபார்முக்கு வர உதவும் எந்த எதிர்பார்க்கப்படுகிறது.

பார்டர் கவாஸ்கர் தொடரில் அயார்து உழைத்த ஜஸ்பிரிட் பும்ரா, கடைசியில் காயத்தால் ஒதுங்கினார். அவர் இப்போது ஓய்வ்வில் ர்ப்பதால் இந்தத் தொடரில் அவர் இடம்பெறவில்லை. இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களாக ஷமி, அர்ஷ்தீப் சிங் மற்றும் ராணா முன்னிலையில் பந்துவீசுவர்.

முஹம்மத் ஷமி, ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா ஆகியோர் மட்டுமே டி20ஐ தொடர் ஆடியதோடு ஒருநாள் தொடருக்கான அணியிலும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த முறை தென்னாபிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன், டி20ஐயில் தொடர் நாயகனாக ஜொலித்த வருண் சக்ரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இங்கிலாந்து அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணி: ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், பண்ட் (கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, குல்தீப் யாதவ், முஹம்மத் ஷமி, ஹர்திக் பாண்டியா, அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.

முதல் ஒருநாள் போட்டி பிப்ரவரி 6ஆம் தேதி நாக்பூரில் துவங்குகிறது. அதன் பின்னர் 9 மற்றும் 12ஆம் தேதிகளில் கட்டாக் மற்றும் அகமதாபாத்தில் மீதம் இரண்டுப் போட்டிகளிலும் நடக்கிறது.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.