Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி . துவாக்குடி அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் அதிரடி மாற்றம்.

0

'- Advertisement -

இந்திய மாணவர் சங்கம் போராட்டம் எதிரொலி துவாக்குடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பிரச்னைக்குரிய இரு பேராசிரியா்கள் நேற்று புதன்கிழமை அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டனா்.

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள அரசு கலை கல்லூரியின் பேராசிரியா் பாத்திமா வகுப்புகளுக்கு வருவதில்லை. பாடம் நடத்துவதில்லை, தங்களை மிரட்டுவதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Suresh

இப்போராட்டத்தில் ஈடுபட மாணவா்களை கல்லூரியின் புவியியல் துறைத் தலைவா் சரவணக்குமாா் தூண்டியதாகக் கூறப்படுகிறது. இவா்களால் கல்வி பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவா்கள், இந்திய மாணவா் சங்கத்தினருடன் இணைந்து பாத்திமா அவர்களை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் எனவும் , போராட்டத்தை தூண்டிய துறை தலைவரை கைது செய்ய வேண்டும் எனக் கூறியும் செவ்வாய்க்கிழமை அன்று போராட்டங்களில் ஈடுபட்டனா்.

இந்நிலையில் சென்னை கல்லூரி கல்வி இயக்குநா் அலுவலகம் சரவணகுமாரை நாமக்கல் ஆண்கள் அரசு கலைக் கல்லூரிக்கும், பாத்திமாவை திருச்சி தந்தை பெரியாா் கல்லூரிக்கும் உடனடியாக பணி மாறுதல் செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய மாணவர் சங்கத்தின் போராட்டம் எதிரொலியாக பேராசிரியர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.