திருச்சியில் தேவாலயத்தில்
30 உயரத்தில் இருந்து விழுந்த எலக்ட்ரீஷியன் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் பரிதாப சாவு.

திருச்சி கே.கே.நகர், சுப்ரமணியபுரம், மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (வயது31). இவர் சங்கிலியாண்டபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் ஜன.20ந் தேதி இவர் கோட்டை, தெப்பக்குளம் அருகே உள்ள ஓர் தேவாலயத்தில் 30 அடி உயரத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக பிரவீன்குமார் 30 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் ஜன.21ந்தேதி அரசு மருத்துவமனையில் இருந்த பிரவீன்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அவரது உறவினர் உஷா தேவி அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.