Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் 4 பெண்கள் உள்பட 10 பேர் மீட்டு காப்பகத்தில் ஓப்படைத்த ஆர்.பி.எப். போலீசார்

0

'- Advertisement -

 

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில்

4 பெண்கள் உள்பட 10 பேர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

 

திருச்சி ரெயில்வே பாதுகாப்பு படை முதுநிலை கோட்ட ஆணையர் அபிஷேக் மற்றும் உதவி ஆணையர் பிரமோத் நாயர் ஆகியோர்களது மேற்பார்வையில் திருச்சி ஆர்.பி.எப். இன்ஸ்பெக்டர் செபாஸ்டியன் தலைமையில் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது, ஆதரவற்ற நிலையில் ஒன்பது முதியவர்கள் மற்றும் மனநலம் குன்றிய ஒருவர் பிரதான நுழைவாயில் பகுதியில் நடமாடுவதைப் பார்த்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது அவர்கள் தங்கள் பெயர் மற்றும் முகவரியை வெளிப்படுத்தினர்;

 

லக்ஷ்மையா, (வயது 50), .கிளி, (வயது 85), .சுரேஷ், ( வயது 51, பொன்னையா, (வயது 68, ) எஸ்.குமார், ( வயது 73, )செல்வகுமார், (வயது 41).தனம், (வயது 60, ) செல்லம்மாள்,, ( வயது 60, ) அலமேலு, ( வயது 85, ) 10). சௌகர், (வயது 23 )(மனநலம் குன்றியவர்),உத்தரபிரதேசம், என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அனைவரும் மீட்கப் பட்டு, திருச்சி ஸ்ரீ அறக்கட்டளை முதியோர் இல்லம் மற்றும் மன நோயாளிகள் இல்லத்தில் பராமரிப்புக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஒப்படைக்கப்பட்டனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.