கௌரவ டாக்டர் பட்டம் பெற்ற திருச்சி பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீனுக்கு அமைச்சர் கே.என்.நேரு வாழ்த்து
திருச்சி பீமநகர் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் உரிமையாளர் நிஜாமுதீனுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம். அமைச்சர் கே என் நேரு வாழ்த்து.
திருச்சி பீமநகரில் உள்ள பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் அண்ட் ஹோம் அப்ளையன்ஸ் நிறுவனம் திருச்சியை தலைமை இடமாக கொண்டு சென்னை, மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், தென்காசி, மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் விற்பனையகம் தொடங்கி செயல்பட்டு வருகிறது .
இங்கு குறைந்த விலையில் டிவி மட்டுமல்லாமல் பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மிக்ஸி, ஃபேன் ,செல்போன் மற்றும் அதன் உதிரி பாகங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இதன் உரிமையாளர் தொழிலதிபர் எம்.எஸ்.நிஜாமுதீன் அவர்களுடைய சிறந்த தொழிலதிபருக்கான சேவையை கௌரவிக்கும் வகையில் அமெரிக்காவின் ( குளோபல் ஹியூமன் பீஸ் யுனிவர்சிட்டி ) Global Human peace University சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
கௌரவ டாக்டர் பட்டத்தை யுனிவர்சிட்டி இயக்குனர் புதுச்சேரி முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் என். ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து திமுக சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு திருச்சி மத்திய மாவட்ட தலைவர் ஸ்டீல் சலாவுதீன் உடன் சென்று தொழிலதிபர் பிஸ்மி நிஜாமுதீன் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என். நேரு அவர்களை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார்.