திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில்
பெண்ணின் 3 பவுன் தாலி செயின் பறிப்பு .
திருச்சி திருவானைக்காவல் ஜம்புலிங்கபுரம் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கூத்தசாமி
இவரது மனைவி அகிலா (வயது 41) இவர் கிராப்பட்டியில் உள்ள தனது சகோதரர் விஜயன் என்பவரது ஓட்டலில் அவருக்கு துணையாக பணியாற்றி வருகிறார்.

வழக்கமாக காந்தி மார்க்கெட்டுக்கு சென்று காய்கறிகளை வாங்கி வருவார், அதே போன்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு அதிகாலை 6 மணி அளவில் அரிஸ்டோ ஹோட்டல் ரவுண்டானா பகுதியில் மேம்பாலத்தில் சென்ற போது அவரை
ஒரு மர்ம நபர் அவரை வழிமறித்தார்.
பின்னர் அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டான் .
இது குறித்து அகிலா கன்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அவர் அளித்த புகாரின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த மர்ம ஆசாமியை வலை வீசி தேடி வருகின்றனர்.
திருச்சி அதிகாலை போக்குவரத்து நீண்ட மேம்பாலத்தில் ஜெயின் பறிப்பு நடைபெற்றுள்ளது பொது மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.