வாட்ஸ் ஆப் அழைப்பால்
திருச்சியில் ரூ.11 லட்சம் பணம் இழந்தவர் சைபர் கிரைம் போலீசார் புகார்
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கரூர் பைபாஸ் சாலையை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது43). இவரது செல்போ னுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ‘வாட்ஸ் ஆப் மூலம் ஒரு
அழைப்பு வந்தது.
எதிர்முனையில் பேசியவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் சம்பாதிக்க முடியும் என்று தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி பேசி உள்ளார் .
இதை நம்பிய கிருஷ்ணமூர்த்தி 3 மாதங்கள் வரை பல்வேறு தவணைகளில் ரூ.11 லட்சம் வரை மர்ம நபர் கூறிய வங்கி கணக்குக்கு அனுப்பினார். முதலில் அவர்கள் கூறியவாறு பணம் திரும்ப வந்துள்ளது . பின்பு அவர்களிடமிருந்து எந்த தகவலும் இல்லை .
ஒரு
கட்டத்தில் முதலீட்டுக்கான பணத்தை கேட்டபோது செல் போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப் பட்டிருந்தது.
இதனால் அவர்கள் மோசடி பேர்வழிகள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணமூர்த்தி நடந்த சம்பவம் குறித்து மாநகர ‘சைபர் கிரைம்’ போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலமுறை காவல்துறையினர் இது போன்ற பணத்தை இரட்டிப்பாகி தருகிறேன் , ஆயிரம் ரூபாய் கட்டினால் 3000 சம்பாதிக்கலாம் , வீட்டில் இருந்தே தினமும் 300 முதல் 1000 ரூபாய் சம்பாதிக்கலாம் போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் கூறியும் உழைக்காமல் சம்பாதிக்கலாம் என்ற ஆசையில் இவ்வாறு தொடர்ந்து பணத்தை இழந்து வருபவர்கள் இருந்து தான் வருகிறார்கள் .