திருச்சியில் நடைபெற்ற தமிழ்நாடு தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் 2வது பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்
திருச்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது
தமிழ்நாடு தேவேந்திர குல மத்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் திருச்சி மாவட்ட இரண்டாவது பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.
மாநில பொருளாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ரமேஷ் குமார் மாநிலச் செயலாளர் செல்லதுரை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
மேலும் இக்கூட்டத்தில் சென்னை அண்ணா சாலையில் தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலையை அமைக்க வேண்டுமென்றும், தேவேந்திர குல வேளாளர்களை எஸ்.சி பட்டியலில் இருந்து நீக்கி இதர பிற்படுத்த ப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும்,
மேலும் குற்றாலத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் நியமிக்கப்பட்ட மாநில நிர்வாகிகளை திருச்சி மாவட்ட குழு அங்கீகரிக்க பட்டதாகவும்,

மேலும் தியாகி இமானுவேல் சேகரன் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
மேலும் தமிழக அரசில் காலியாக உள்ள பின்னடைவு காலி பணியிடங்களில் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனை தொடர்ந்து நடைபெற்ற திருச்சி மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட புதிய தலைவராக கோபாலகிருஷ்ணனும் செயலாளராக பார்த்திபன் பொருளாளராக சக்திவேல் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
துணை தலைவர்கள் நேதாஜி,செந்தில்குமார், மோகன்,துணை செயலாளர்கள் கவியரசன் பழனிவேல், அணி செயலாளர்கள், ரஞ்சித்,பூபாலன்,
சுரேஷ்குமார்,மாவட்ட ஆலோசனைகுழு உறுப்பினர் கண்ணையன் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.