Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி ஸ்ரீரங்கத்தில் கழுத்தை அறுத்துக்கொண்ட வாலிபர் பரிதாப பலி .

0

'- Advertisement -

கழுத்தை அறுத்துக்கொண்டு வாலிபர் தற்கொலை?
ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை
:

ஸ்ரீரங்கம் மேல அடயவளஞ்சானில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் முரளிதரன் (வயது 68),

இவரது மகன் ரெங்கநாதன் (வயது 29). இவர் வலிப்பு நோய் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் நேற்று ஜன.10ம் தேதி ரங்கநாதன் வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். மேலும் அவரது கழுத்தில் ரத்த காயங்கள் காணப்பட்டுள்ளது.

உடனடியாக அவரை மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மேலும் ரங்கநாதன் இதற்கு முன் ஏற்கனவே 2 முறை தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்துள்ளது. எனவே அவரே கருத்தை கத்தியால் அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து இருப்பார் என கருதப்படுகிறது .

இருந்தாலும் ரங்கநாதனே கத்தியால்  தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

'- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.