திருச்சியில் சிங்கப்பூர் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் விற்ற 4 மாணவர்கள் கைது.
- திருச்சியில்
மாணவர்களுக்கு போதை பொருள் விற்பனை செய்த சிங்கப்பூர் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய 3 கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது.
திருச்சி ராமலிங்கம் பார்க் பகுதியில் இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மெத்த பட்டமின் போதைப் பொருள் விற்பனை செய்யப்படுவதாக உறையூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக உறையூர் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.
பின்னர் போதை பொருள் விற்பனை கும்பலை சேர்ந்த நான்கு பேரை பிடித்தனர் .
போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்டவர்கள் திருச்சி கனரா பேங்க் காலனி சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்த பூஜித் (வயது 24), ஈரோடு டீச்சர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆல்வின் (23) திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்எஸ்சி படித்து வருகிறார்.
திருச்சி ராஜா காலனி பகுதி சேர்ந்தவர் நகுல் தேவ் ( வயது 21). திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
கேகே நகர் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் நவீன் ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் கைதான போதைப் பொருள் விற்பனை கும்பலுக்கு சிங்கப்பூர் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த கடத்தல் கும்பலுக்கு தலைவனாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர் செயல்படுவது தெரியவந்துள்ளது.
கைதான இந்த நபர்கள் பெங்களூரில் இருந்து போதை பொருளை வாங்கி வந்து திருச்சி மாநகரில் விற்பனை செய்துள்ளனர். முக்கியமாக கல்லூரி மாணவர்களை குறி வைத்து இந்த விற்பனையை மேற்கொண்டு வந்துள்ளனர் .
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மேலும் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருச்சியில் திருப்பட்டுள்ள இந்த போதைப் பொருளின் மதிப்பு ஒரு லட்சம் என காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது , ஆனால் இது சர்வதேச மதிப்பில் பல லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் பல மாணவர்களின் வாழ்க்கை வீணாகும் முன் எந்தெந்த கல்லூரியில் எத்தனை மாணவர்கள் இந்த போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர் என்பதை போலீசார் விரைவில் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.