மலேசியாவில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் ரூ 15 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்.
பயணியிடம் விசாரணை.
மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .
விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வாண் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது பயணி ஒருவர் கேஸ் சிலிண்டர் ரெகுலேட்டரில் தங்கக் கட்டிகளை உருண்டை வடிவில் மாற்றி மறைத்து கடத்தி வந்தது சோதனையில் கண்டு பிடிக்கப்பட்டது.
கடத்தி வந்த தங்கத்தின் எடை 194 கிராம் ஆகும் .இதன் மதிப்பு ரூ.15 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் 424 ரூபாயாகும்.
தொடர்ந்து தங்கத்தை கடத்தி வந்த அந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.