மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு தியாகிகள் நினைவு கொடி பயணம். ஸ்ரீரங்கத்தில் உற்சாக வரவேற்பு .
விழுப்புரத்தில் நாளை தொடங்கி 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது .
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாடு தியாகிகள் நினைவு கொடி பயணம்.

திருவரங்கத்தில் இன்று வரவேற்பு -எம்.எல்.ஏ பங்கேற்பு.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்
24- வது தமிழ்நாடு மாநில மாநாடு நாளை (3 -ந்தேதி) முதல் 5-ந் தேதி வரை விழுப்புரத்தில் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, கண்ணன் தலைமையில் மதுரையில் இருந்து கொண்டுவரப்பட்ட தியாகிகள் நினைவு கொடி பயணத்திற்கு திருவரங்கத்தில் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் இன்று மேளதாளங்கள், வாண வேடிக்கையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் அங்கு நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை, மாநிலக் குழு உறுப்பினர்கள் ஸ்ரீதர் , ராஜா, மாநகர் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர் .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு, மாவட்ட குழு, பகுதி செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
முன்னதாக செந்தில்குமார் வரவேற்றார். முடிவில் கோவிந்தன் நன்றி கூறினார்.