திருச்சியில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் கூட்டம்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை காப்பாளர் ஆசிரியர் சங்கத்தின் மாநில சிறப்பு செயற்குழுக் கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மாநில நிறுவன தலைவர் சகாதேவன் தலைமையில் நடைபெற்றது.
மாநில செயல் தலைவர் முருகேசன், மாநில தலைவர் மணிமொழி, மாநில பொதுச் செயலாளர் வேல்முருகன் மாநில பொருளாளர் நாராயணசாமி மாநில செய்தி மற்றும் விளம்பர மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் பூமிநாதன் முன்னிலையில் நடைமெற்றது.
இத்துறையில் பணிபுரியும்
காப்பாளருக்கு உதவி மாவட்ட பிற்பட்டோர்
நல அலுவலராக பதவி உயர்வு வழக்க கோரியும்,
இத்துறையில் இயங்கும் கல்லூரி விடுதிகள், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி,தொழிற் பயிற்சிகல்லூரி, தொழிற்பயிற்சிநிலைய விடுதிகள் தற்சமயம் அனுமதிக்கப்பட்டுள்ள பட்டதாரி காப்பாளர் பணியிடங்களை முதுகலை பட்டதாரி காப்பாளர்கள் பணியிடமாக தரம் உயர்த்தி
தருமாறும் மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இக் கூட்டத்திற்கு மாநில நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் காப்பாளர், காப்பாளினிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.