திருச்சியில்
காவலாளிடம் செல்போன் திருடிய வாலிபர் கைது
திருச்சி புத்தூர் மாருதி நகர் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கரூர் மாவட்டம் குளித்தலை சேர்ந்த ராஜு (வயது 65) என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று இவர் பணியில் இருந்த போது இரவு திடீரென்று லேசாக தூங்கிவிட்டார்.
இந்த நிலையில் மர்ம ஆசாமி ஒருவர் ராஜு சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு ஓடிவிட்டார்.இது தொடர்பாக ராஜு அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் சுற்றி திரிந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்தான் செல்போனை திருடியது தெரிய வந்தது.இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய பாலக்கரை கூனி பஜாரை சேர்ந்த அப்துல் காதர் (வயது23) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அப்துல் காதரை கைது செய்தனர்,