திருச்சி ஓயாமரி அருகே சைக்கிளில் மணல்
கடத்திய 2 பேர் கைது.
திருச்சி, ஓயாமரி மயானம் அருகே உள்ள ஆற்றங்கரையோரம் மணல் திருட்டு நடப்பதாக கடந்த டிச.18ம் தேதி போலீசாருக்கு ரசசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு உரிய அனுமதி பெறாமல் சைக்கிலில் வைத்து மணல் கடத்திய மலைக்கோட்டை மீனாட்சி சுந்தரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் (வயது 41) மற்றும் திருச்சி, எஸ்எஸ் காலனி, கீழ தேவதானத்தைச் சேர்ந்த மோகன் ராஜ் (25) ஆகிய 2 பேரை கோட்டை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 3 மூட்டை மணல் மற்றும் மணல் கடத்த பயன்படுத்திய ஓர் சைக்கில் பறிமுதல் செய்யப்பட்டது.
சாக்கு முட்டையில் சைக்கிளில் வைத்து மண் எடுத்துச் சென்ற இருவரும் கைது செய்யப்பட்டதை அறிந்த சிலர் கூறும் போது: வீட்டுக்கு தேவை என அருகில் உள்ள ஆற்று ஓரத்தில் சிறிது மண் எடுத்த இவர்களை கைது செய்த போலீசார் ஆற்று நடுவே சென்று டிப்பர் லாரியில் மண் அள்ளி கடத்துபவர்களை ஏன் கண்டு கொள்வதில்லை என கேள்வி கேட்டுள்ளனர்.