திருச்சி தில்லைநகர் க்ரோ ஹேர் அண்ட் க்ளோ ஸ்கின் நிறுவனத்தின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் பங்கேற்பு.
திருச்சி தில்லை நகரில் க்ரோ ஹேர் அண்ட் குலோ ஸ்கின் நிறுவனத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா.
நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி
வைத்தார்.
திருச்சி தில்லைநகர் முதல் கிராஸில் உள்ள அட்வான்ஸ்டு க்ரோ ஹேர்
அண்ட் குலோ ஸ்கின் நிறுவனத்தின் 2ம் ஆண்டு துவக்க விழா நேற்று நடைபெற்றது.
திரைப்பட நடிகை ரேஷ்மா வெங்கடேஷ் குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி
வைத்தார்.
இதுகுறித்து திருச்சி கிளையின் உரிமையாளர் செந்தில்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: அட்வான்ஸ்டு க்ரோ ஹேர், குலோ ஸ்கின் நிறுவனம் திருச்சி தில்லைநகர் மற்றும் கன்டன் மென்ட் பாரதிதாசன் சாலையில் இயங்கி வருகிறது.
இங்கு முடி மற்றும் தோல் பராமரிப்புக்காக
மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
முடி பராமரிப்புக்காக,க்ரோ ஹேர் ஆக்சிஜன், லேசர் சிகிச்சை, முடிமாற்று
சிகிச்சை,பிஆர்பி சிகிச்சை மற்றும் ஜிஎப்சி சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.
அதிநவீன வசதிகள் மற்றும்
நிபுணத்துவுநர்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கவனிப்பை உறுதி செய்கின்றனர்.
புதுமை மற்றும் சிகிச்சைகளுக்கு ஆண்டு
விழா சலுகை வழங்கப்படுகிறது” என்றார்.
இந்த விழாவில் கே எம் எஸ் ஹக்கீம் பிரியாணி உரிமையாளர் மைதீன், மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.