டெஸ்ட் கிரிக்கெட் எப்போதுமே ஃபாலோ ஆனை தவிர்க்க ஒரு அணி போராடுவது மிகப்பெரிய அவமானமாக பார்க்கப்படும்.
அந்த வகையில் நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராடி ஃபாலோ ஆனை தவிர்த்தது.
இதனை அடுத்து இந்திய அணி டிரஸ்ஸிங் ரூமில் இருந்த பயிற்சியாளர் கம்பீர், விராட் கோலி கேப்டன் ரோகித் சர்மா ஏதோ அணி வெற்றி பெற்றது போல் கொண்டாடினார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாலோ ஆனை தவிர்க்க போராடியதே ஒரு அவமானம்தான். இந்த அவமானத்தை இந்திய அணி வீரர்கள் கொண்டாடினார்கள் என பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய வீரர் லயான், இந்திய அணி வீரர்கள் மீண்டும் பேட்டிங் செய்ய பயந்து தான் பாலோ ஆனை தவிர்த்ததும் கொண்டாடினார்கள் என கிண்டல் அடித்திருக்கிறார். ஆரம்ப காலத்தில் வங்கதேசம் அணி பெரிய அணியை வீழ்த்தினால் கொண்டாடுவார்கள். இதன் மூலம் இந்த வெற்றி எங்களுக்கு எப்போதாவது தான் கிடைக்கும் என்ற தங்கள் மனநிலையை கொண்டாட்டம் மூலம் வெளிப்படுத்துவார்கள்.
இதனை உணர்ந்து கொண்ட முன்னாள் கேப்டன் தோனி, 2008 ஆம் ஆண்டு காமன்வெல்த் முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் சக இந்திய அணி வீரர்களுக்கு ஒரு கட்டளையை போட்டு இருக்கிறார். தோனி குறித்து பத்திரிக்கையாளர் ஒருவர் எழுதிய புத்தகத்தில் இந்த தகவல் இடம் பிடித்திருக்கிறது. அதாவது 2008 காமன்வெல்த் தொடரில் இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.
போட்டி முடிவதற்கு முன்பு தோனி ட்ரெஸ்ஸிங் ரூமில் யாரும் இந்த வெற்றியை பெரிய அளவு கொண்டாடக்கூடாது. ஒரு சாதாரண வெற்றியை போல் தான் இதை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி கட்டளை போட்டிருக்கிறார். இதை அடுத்து இந்திய அணி அப்போதைய உலக சாம்பியன் ஆன ஆஸ்திரேலியா அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியும் இந்திய அணி வீரர்கள் பெரிய அளவு அதை கொண்டாடவில்லை.
இதன் மூலம் சாம்பியனுக்கான மனது எங்களிடம் இருக்கிறது. ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது எங்களுக்கு பெரிய காரியம் இல்லை என்று தோனி கெத்து காட்டினார்.
ஆனால் பாலோ ஆன் தவிர்த்ததையே கொண்டாடி இந்திய அணி தற்போது எந்த மனநிலையில் இருக்கிறது என்பதை பயிற்சியாளர் கம்பீரும்,விராட் கோலி, ரோஹித் சர்மாவும் நேற்று வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள் என கிரிக்கெட் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
மூன்றாவது டெஸ்ட் போட்டி கடைசி நாள் இன்று இந்திய அணி 260 ரன்களுக்கு ஆட்டம் நடந்தது . தொடர்ந்து ஆஸ்திரேலியா ஏழு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது .
தற்போது இந்திய அணிக்கு 275 ரன்கள் இலக்காக வைத்துள்ளது . டிக்கெட்டை இழக்காமல் டிரா செய்யுமா இந்தியா . ரசிகர்கள் எதிர்பார்ப்பு .