திருச்சி புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
புனித சிலுவை தன்னாட்சி கல்லூரியின் மிளிரும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் .
புனித சிலுவை தன்னாட்சிக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் பொதுக்குழு கூட்டமானது அன்னை அரங்கினில் நடைபெற்றது. மாணவர்களுக்கும் கல்லூரிக்குமான தொடர்பை ஒன்றிக்கும் வகையிலும் சிறப்பிக்கும் விதத்திலும் இந்நிகழ்வு அமைந்தது.
1983-1988 ஆம் கல்வியாண்டின் ஆங்கில துறையின் முன்னாள் மாணவியும் தமிழ்நாடு அரசின் சுற்றுலா கலாச்சார ஏற்றும் சமய அறக்கட்டனை துறையின் கூடுதல் செயலாளருமான எஸ்.பூரணி சிறப்பு விருந்தினராக வருகை தந்து இந்நிகழ்வினை சிறப்பித்தார்.
புனித சிறுவை தன்னாட்சியின் முதல்வர் முனைவர் அருட்சகோதிரி இசபெல்லா ராஜகுமாரி நிகழ்விற்கு தலைமை வகித்தார்.
இறை வணக்கத்துடன் கூடிய தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து மாணவி வரவேற்பு நடனமும் விழாவிற்கு நல்லதொரு துவக்கமாய் அமைந்தது.
முன்னாள் மாணவர் சங்கத்தின் மையக்குழு உறுப்பினரும் வேதியியல் துறையின் உதவிப் பேராசிரியருமான முனைவர் அமலா இன்ஃபன்ட் ஜாய்ஸ் வரவேற்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து சிறப்பு விருந்தினர் எம்.பூரணியின் சிறப்பு மிகுந்த சாதனைகளைப் பாராட்டி கல்லூரியின் முதல்வர் முனைவர் அருள்சகோதரி பொள்ளாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி சிறப்பு செய்தார்.
முன்னாள் மானள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் ஆங்கில துறையின் உதவிப் பேராசிரியருமான முனைவர் ஷெரில் ஆண்டோனேட் டிமல் ஆண்டு அறிக்கையை வாசித்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் எஸ். பூரணி அவர்கள் முன்னாள் மாணவர் செய்தி மடல் ஆகிய InTouch தொகுதி 18-இல் முதல் பிரதியை வெளியிட கல்லூரியின் முதல்வர் முனைவர் அருட்சகோதிரி இசபெல்லா ராஜகுமாரி அவர்கள் பெற்றும் கொண்டார்.
இச்செய்தி மடல் கல்லூரியின் சாதனை வளர்ச்சியை முன்னாள் மாணவர்களுக்கும் எடுத்துரைக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டதாகும். கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க பொதுக்குழுக் கூட்டத்திற்கு ஒரு தனித்துவமான பெயரை அறிமுகப்படுத்துவதற்கு என முன்னாள் மாணவர்கள் இடையே போட்டிகள் நடத்தப் பெற்றது. அதில் கல்லூரியில் பயின்று கல்லூரியிலேயே பணியாற்றும் விலங்கியல் துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் ராஜாந்தி டி மோதிலால் வெற்றி பெற்றமையைப் பாராட்டி முதல்வர் அவர்கள் பரிசு வழங்கினார்.
இந்திகழ்வின் சிறப்பு அம்சமாக முன்னாள் மாணவர்களுக்கென ஹ சிரி ஹியர் அண்ட் ஹில் அதாவது ‘கதைப்போமா” என்னும் ஆலோசனை மையம் தொடங்கப்பட்டது. இவஆலோசனை மையம் முன்னாள் மாணவர்கள் மீதும் அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்விலும் கல்லூரியின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனை உணர்த்தும் வகையில் அமைந்ததாரும் இவ்ஆலோசனை மையத்தின் நோக்கத்தினபும் சின்னத்தினையும் கல்லூரியின் வளாக மந்திரியும் ஆலோசனை மையத்தின் ஆலோசகரமான முனைவர் அருள்சகோதரி கேத்தரின் அறிமுகம் செய்தார்.
சினைத்தினை முன்னாள் மாணவரும் இன்னாள் கல்லூரியின் உதவிப் பேராசிரியருமான மோகள் அவர்களால் உருவாக்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக வருகை தந்து சிறப்பு செய்த தமிழ்நாடு அரசின் சுற்றுலா கலாசார மற்றும் சமய அறக்கட்டளை துறையின் கூடுதல் செயலாளர் பூரணி தனது வளர்ச்சி பயணம் குறித்தும் தன் வாழ்வில் தனக்கு கிடைத்த பல்வேறு நிலைபாடுகளுக்கு காரணம் புனித சிலுவை கல்லூரியில் இருந்து தான் சுற்றுக்கொண்ட பல நற்பண்புகளும் தன் சிந்தனைகளும் என்பதையும் பெண்னாக தான் சாதித்த சாதனைகளுக்கான நிலைக்கலன் தான் கற்ற கல்லூரி என்றும் உணர்வுபூர்வமான உரையை தனது சிறப்புரையில் ஆற்றினார். முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆங்கில துறையின் இணை பேராசிரியருமான முனைவர் மேரி ஜெயந்தி இணைய வழியில் இணைவதற்கான வழிவகை செய்ததன் வழி UAE சிங்கப்பூர் மலேசியா, அமெரிக்கா, U K. கவடா மற்றும் ஆஸ்திரேலியா என பல்வேறு நாடுகளில் 12 முன்னாள் மாணவர்கள் இணையவழி இணைந்து கல்லூரியின் உலகளாவிய ஒத்துழைப்பு செயற்பாடுகளையும் தான் பெற்ற கல்லூரி அனுபவங்களையும் மகிழ்வான தருணங்களையும் பகிர்ந்து கொண்டவர்.
ஒற்றுமையுணர்வையும் மனமகிழ்வையும் உற்சாகத்தையும் தருகின்ற விளையாட்டினை முன்னாள் மாணவர்களுக்கு நடத்தி வெற்றிபெற்றவர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
தமிழாய்வுத் துறையின் உதவி பேராசிரியகும் முன்னாள் மாணவர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் ஷர்மி நன்றி உரை வழங்கினார்.
புனித சிலுவையின் தன்னாட்சிக் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பின் பொதுக்குழு கூட்டமானது கல்லூரிக்கும் மாணவர்களுக்குமான பிணைப்பை இணைப்பினை வலுப்படுத்தியது. சாதனைகளை கொண்டாடியது, புதிய பல சிறந்த நினைவுகளை உருவாக்கியது. எதிரகால வாழ்விற்கான நல்வாய்ப்பினை உருவாக்கி தந்தது, நிறைவாக நினைவலைகளை வரலாற்றில் பதித்திடும் விதமாய் புகைப்படம் எடுக்கும் நிகழ்வினைத் தொடர்ந்து கல்லூரிப்பன்னுடன் விழா இனிதே நிறைவுற்றது.