திருச்சி உறையூரில் வெளிமாநில லாட்டரி விற்ற நபர் கைது. மற்றொருவர் தப்பி ஓட்டம். திருச்சி உறையூர் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் உறையூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக உறையூர் சுரேந்திரன் (வயது 28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தப்பி ஓடிய உறையூர் தியாகராஜ நகரை சேர்ந்த மகேந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி உறையூரில்
வெளிமாநில லாட்டரி விற்ற நபர் கைது.
மற்றொருவர் தப்பி ஓட்டம்.
திருச்சி உறையூர் பகுதியில் வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து உறையூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து சென்று தீவிரமாக கண்காணித்தனர்.
இந்நிலையில் உறையூர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்றதாக உறையூர் சுரேந்திரன் (வயது 28) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் மற்றும் லாட்டரி சீட்டுகள் விற்றதற்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் தப்பி ஓடிய உறையூர் தியாகராஜ நகரை சேர்ந்த மகேந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.