திருச்சியில் ஓசியில் சரக்கு கேட்டு
டாஸ்மார்க் டிரக்கை சேதப்படுத்திய ரவுடி கைது.
திருச்சி கோட்டை கீழ தேவதானம் அருகே உள்ள டாஸ்மாக்கில் மேலாளராக பணியாற்றி வருகிறார் வீரமணி (வயது37).
இவர் கடந்த 13 ந் தேதி டாஸ்மாக் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் இவரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார்,
வீரமணி தர மறுக்கவே அவர் அங்கு நின்று கொண்டிருந்த டாஸ்மார்க் லோடு ட்ரக்கின் முன்பக்க கண்ணாடியை உடைத்துள்ளார்.
இதுகுறித்து வீரமணி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து கீழ தேவதானம் பகுதியைச் சேர்ந்த அருண் பிரசாத் (வயது 36) என்பவரை டாஸ்மார்க் ட்ரக்கின் கண்ணாடியை உடைத்ததாக கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட அருண்பிரசாத் சரித்திர பதிவேடு ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.