திருச்சி அரசு மருத்துவமனையில் 3 வயது குழந்தையின் மூச்சுச் குழாயில் சிக்கியிருந்த திருகு வெற்றிகரமாக அகற்றம் .
திருச்சி அரசு மருத்துவமனையில் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசின் திருகாணி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.
பெரம்பலூா் மாவட்டம், எருதுபட்டியைச் சோந்த 3 வயது ஆண் குழந்தை கடந்த 13 ஆம் தேதி கால் கொலுசின் திருகை தவறி விழுந்துவிட்டது. இதையறிந்த பெற்றோா், குழந்தையை இலுப்பூா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

அங்கு எக்ஸ்ரே எடுத்து பாா்த்ததில், அந்த திருகு குழந்தையின் மூச்சுக்குழாய் சிக்கியிருந்தது தெரியவந்தது. தொடா்ந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தான்.
இங்கு மருத்துவமனை முதன்மையா ச. குமரவேல், காது மூக்கு தொண்டை அறுவைசிகிச்சை துறைத் தலைவா் ராதாகிருஷ்ணன், உதவி பேராசிரியை அண்ணாமலை, மயக்கவியல் துறை பேராசிரியை செந்தில்குமாா் மோகன் ஆகியோா் கொண்ட குழுவினா், குழந்தைக்கு மயக்கமளித்து, உள்நோக்கி (ரிஜிடு பிராங்கோஸ்கோப்) மூலம் மூச்சுத் திணறி மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த கொலுசுத் திருகை, ரத்தப்போக்கு.
தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.
அந்தத் திருகை அங்கேயே விட்டிருந்தால், இன்னும் பல பகுதிகளுக்குச் சென்று தொற்றை ஏற்படுத்தியிருக்கலாம் என மருத்துவா்கள் தெரிவித்தனா்.