Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சி அறிவாளர் பேரவையின் வெள்ளி விழா சைவராஜு தலைமையில் நடைபெற்றது.

0

 

திருச்சி அறிவாளா் பேரவையின் வெள்ளி விழா திருச்சி தமிழ்ச் சங்க வளாகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பேரவையின் தலைவா் வை. சைவராஜூ தலைமை வகித்தாா். இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினரான ப. சுப்பிரமணியன், அறிவாளா் பேரவையின் முதன்மை ஆலோசகா் சி. அசோகன் ஆகியோா் புலவா் லால்குடி உலக புவியரசுக்கு சீா்மிகு சான்றோா் பெருந்தகை விருது வழங்கி கௌரவித்தனா்.

வாழ்த்துரை வழங்கி பேரவையின் முதன்மை ஆலோசகா் சி. அசோகன் பேசினாா். இதில், தமிழுக்கு சேவையாற்றி வரும் சான்றோா்களை திருச்சி அறிவாளா் பேரவை தொடா்ந்து கௌரவித்து வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டு வெள்ளி விழாவில், அகவை 93-இல் அடியெடுத்து வைப்பதுடன், தள்ளாத வயதிலும், உடல்நலன் குன்றியிருந்தாலும் தமிழுக்கும், தமிழ் வளா்ப்போருக்கும் அளப்பரிய சேவையாற்றி வரும் லால்குடி உலக புவியரசுவைக் கௌரவிப்பதில் பெருமையடைகிறோம்.

அவா் மேலும் பல ஆண்டுகள் வாழ்ந்து, தமிழுக்கு தொண்டாற்றி, தமிழ் கூறும் நல்லுலகுக்கு தகுந்த முன்னோடியாகத் திகழ வாழ்த்துகிறேன் என்றாா்.

முன்னதாக, துணைத் தலைவா் தே. வைகை மாலா வரவேற்றாா். துணைத் தலைவா் என். பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். இதில், க. லெட்சுமணன், தொழிலதிபா் ஆா். மனோகரன், கலந்து கொண்டனா். நிறைவில் அமுதா நன்றி கூறினாா்.

Leave A Reply

Your email address will not be published.