அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்திற்கு 28ம் ஆண்டாக மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பில் சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்கு 28-ஆவது ஆண்டாக 10 டன் மளிகை பொருள்கள் நேற்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பில் ஆண்டுந்தோறும் காா்த்திகை மாதம் முழுவதும் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் பகுதியில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும், 28 -ஆவது ஆண்டாக சபரிமலையில் டிசம்பா் 15- ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை அன்னதானம் வழங்கப்படுகிறது.
இதற்காக ஸ்ரீரங்கம் பகுதியில் செயல்பட்டு வரும் ஐயப்பா சேவா சங்கத்தின் அன்னதானம் நடைபெறும் இடத்திலிருந்து 10 டன் எடையுள்ள சுமாா் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மளிகை, காய்கனிகள் லாரி மூலம் வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. இதனை மாவட்ட போசகா் என்.வி.முரளி கொடியசைத்து அனுப்பி வைத்தாா்.
நிகழ்ச்சியில், ஐயப்ப சேவா சங்கத்தின் மாவட்ட தலைவா் ரமேஷ், செயலாளா் ஸ்ரீதா், அலுவலக காரியதரிசி அம்சாரம், உதவி தலைவா்கள் முத்து, ராஜகோபால், இணை செயலாளா்கள் ராதாகிருஷ்ணன், தா்மலிங்கம், சிதம்பரம் உள்ளிட்டபலா் கலந்து கொண்டனா்.