Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com

திருச்சியில் 2வது நாளாக தொடர்ந்து மழை. மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியிலும் பதிவான மழை அளவு விபரம்.

0

 

திருச்சியில் இரண்டாவது நாளாக தொடர் மழையால்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,
இன்று விடியற்காலை தொடங்கி விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது 10 முதல் 15 நிமிடங்களுக்கு
திடீரென்று கனமழையும் பெய்து வருகிறது.

திருச்சி மாநகரம் மட்டுமல்லாது மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. காலை 6 மணிக்கு தொடங்கி மாலை வரையில் லேசானதும், மிதமானதுமான மழை பெய்து
இதனால் மாநகரில் சாலையோரம் வியாபாரிகளும், தள்ளுவண்டி வியாபாரிகளும் தொடா் மழையால் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

இதேபோல, மழை காரணமாக ஆங்காங்கே சாலைகளில் தண்ணீா் தேங்கி நின்றதும், சாலைகள் குண்டும், குழியுமாக மாறியிருந்ததால் வாகன ஓட்டிகளும் சிரமப்பட்டனா்.
குறிப்பாக இந்த மழை காரணமாக சத்திரம் பேருந்துநிலையம், தில்லை நகா், அண்ணா நகா், உழவா் சந்தை, கண்டோன்மெண்ட், மத்திய பேருந்துநிலையம், உறையூா், வயலூா், புத்தூா், கரூா் புறவழிச் சாலை என மாநகரப் பகுதியின் பிரதான சாலைகளில் ஆங்காங்கே பள்ளங்களில் மழைநீா் தேங்கியிருந்தன. வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமங்களுக்கு இடையே வாகனங்களை ஓட்டிச் சென்றனா்.

திருச்சியில் இன்று விடிய காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இரண்டாவது நாளாக இன்று வெயில் அடிக்கவில்லை. மாறாக கொடைக்கானல் போன்ற திருச்சி திருச்சி மாவட்டம் முழுவதும் குளிந்த காற்றுடன் கொடைக்கானல் போன்று குளு குளு என்று இருந்தது.சாலைகளில் வாகனங்களின் பெருக்கம் குறைவாக காணப்பட்டது.

மேலும் சாலைகளில் வெளிச்சம் குறைவாக இருந்ததால் வாகன ஓட்டிகள் விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.
மேலும் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதில் திருச்சி மாவட்டத்தில் நேற்று முதல் இன்று காலை 6: மணி வரை பதிவான மழை அளவை, மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

லால்குடி வட்டத்திற்கு உட்பட்ட கல்லக்குடி 18.4 மி.மீ, லால்குடி 24.4 மி.மீ, நாத்தியார் ஹெட் 9.2 மி.மீ, புள்ளம்பாடி 21.8 மி.மீ,
மண்ணச்சநல்லூர் வட்டத்திற்கு தேவிமங்கலம் 12.4 மி.மீ, சமயபுரம் 17 மி.மீ, சிறுகுடி 22.2 மி.மீ வாத்தலை அணைகட்டு 18.4 மி.மீ,
மணப்பாறை வட்டத்திற்கு உட்பட்ட மணப்பாறை 6 மி.மீ, பொன்னியார் டேம் 8 மி.மீ,
மருங்காபுரி வட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி 14.2 மி.மீ, மருங்காபுரி 13.2 மி.மீ,
முசிறி வட்டத்திற்கு உட்பட்ட முசிறி 13 மி.மீ, புலிவலம் 4 மி.மீ, தாத்தையங்கார்பேட்டை 12 மி.மீ,
திருவரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு 11 மி.மீ,
திருவறும்பூர் வட்டத்திற்கு உட்பட்ட துவாக்குடி ஐஎம்டிஐ 22.5 மி.மீ,
துறையூர் வட்டத்திற்கு உட்பட்ட கொப்பம்பட்டி 11 மி.மீட்டர், தென்பரநாடு 16 மி.மீட்டர், துறையூர் 13 மி.மீட்டர்,
திருச்சி (கிழக்கு) கோல்டன் ராக் 16.4 மி.மீட்டர், விமான நிலையம் 18.4 மி.மீட்டர்
திருச்சி (மேற்கு) ஜங்ஷன் 17.6 மி.மீட்டர், டவுன் 17.3 மி.மீட்டர் பதிவாகி உள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மொத்தத்தில் 357.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. சராசரியாக 14.9 ஆக மழையின் அளவு பதிவாகியுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.