3-ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்ற இந்தியா.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்திய அணி சீனாவை 1-0 என வென்றது.
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கியில் இந்திய அணி இறுதிப்போட்டியில் சீனாவை வென்றது.
இன்று நடைபெற்ற பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி சீனாவின் மகளிரணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியனான இந்திய அணி 3 ஆவது முறையாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி வீராங்கனை தீபிகா 31ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.
இந்தத் தொடர் முழுவதும் தீபிகா அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் 11 கோல்களுடன் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற சீன அணியை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இடம் பிடித்த சீனா அணிக்கு வெள்ளியும் , மூன்றாம் இடம் பிடித்த ஜப்பான் அணிக்கு வெண்கல பதக்கமும் வழங்கப்பட்டது .