சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இந்தியா முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்கள் விரதம் மேற்கொண்டு, சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு புனித யாத்திரை மேற்கொள்கின்றனர்.
மேலும் மலையாள மாதப் பிறப்பின் முதல் ஐந்து நாட்களும், விஷூ அன்றும் கோயில் நடை திறக்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது கார்த்திகை மாதத்தை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து சபரிமலை செல்ல ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
பெரும்பாலான பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க வாகனங்களில் சென்றாலும் சிலர் பாத யாத்திரையாக இருமுடி கட்டி செல்வது உண்டு அவ்வாறு செல்லும் பக்தர்கள் திருச்சி ஐயப்பன் கோயிலில் தங்கி செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
இதற்கு நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ள விதிமுறைகள் என்னவென்றால்
இங்கு தங்கும் பாதயாத்திரையாக செல்லும் ஐயப்ப பக்தர்கள் கண்டிப்பாக 1.இருமுடி தரித்திருக்க வேண்டும்
2. எட்டு முப்பது மணிக்கு முன்பாக அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்
3. புகைப்படத்துடன் கூடிய ஏதாவது ஒரு அடையாள கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது .
எனவே பாதயாத்திரை ஆக செல்லும் ஐயப்ப பக்தர்கள் திருச்சி ஐயப்பன் கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தங்கும் வசதியினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.